கம்யூ. கட்சி அலுவலகம் மீது தாக்குதல்- கட்சிகள் கண்டனம்!

பாலன் இல்லம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
பாலன் இல்லம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
Published on

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் சென்னை, தியாகராயர் நகரில் நடிகர் சிவாஜிகணேசன் வீட்டுக்கு அருகில் உள்ளது. நேற்று இந்தக் கட்டடத்தின் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் , ”இது சம்பந்தமாக அந்நிகழ்வில் ஈடுபட்டவர்கள் பெரிதும் கருவிகளாகவே இருக்கக் கூடும்; அதன் முழுப் பின்னணியை சரியாக விசாரித்து, உரிய நடவடிக்கையை சென்னை மாநகர காவல் துறையும், உளவுத் துறையினரும் எடுக்கவேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் உருவாக்க அரசியல் எதிரிகளின் திட்டமிட்ட நடவடிக்கையா என்பதும் ஆராயப்படவேண்டும். தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து வன்முறை நடக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கும் சதியையும் அலட்சியப்படுத்த முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனுடைய பின்னணியை சரியாக விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். 

தாக்குதல் நடத்திய சமூக விரோதிககள் அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தாக்குதலுக்கான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டுமெனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com