கருணாநிதி பிறந்தநாளன்று சத்துணவில் சர்க்கரைப் பொங்கல்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு ஏற்கெனவே, முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரது பிறந்தநாளன்று இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது.

அதே போன்று, கருணாநிதி பிறந்தநாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்திருந்தார்.

அதன்படி, அங்கன்வாடி மையங்களில் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 3ஆம் தேதியன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com