காங்கிரசில் சேர்ந்தார் ஜெகன்மோகனின் தங்கை சர்மிளா!

காங்கிரசில் சேர்ந்தார் ஜெகன்மோகனின் தங்கை சர்மிளா!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகனின் தங்கையும் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவருமான சர்மிளா இன்று காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இணைந்தார்.

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பிறகு அண்ணன் ஜெகன் அரசியலில் முன்னுக்கு வந்தநிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஷர்மிளா 2021இல் தனிக் கட்சி தொடங்கினார்.

ஓராண்டுக்கும் மேலாக அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதாகப் பேச்சு எழுந்தது. தெலங்கானா மாநிலத் தேர்தலில் அவர் இணைப்பு நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. சட்டமன்றத் தேர்தலில் சர்மிளாவின் கட்சி போட்டியிடாமல் காங்கிரசுக்கு ஆதரவளித்தது.

அதைத் தொடர்ந்து இன்று புதுதில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி எம்.பி. முன்னிலையில் சர்மிளா தன் கட்சியை காங்கிரசில் இணைத்துக் கொண்டார். 

இவரின் வருகையானது அடுத்துவரும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு பலன் அளிக்கும் என காங்கிரஸ் தரப்பு கருதுகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com