கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம்
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம்

காவிரி நீர் தர முடியாது - கர்நாடக அனைத்து கட்சிகள் கூட்டத்திலும் முடிவு

காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர்திறந்துவிட முடியாது என கர்நாடக அனைத்து கட்சிகளின் கூட்டத்திலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இன்று காலை நடைபெற்ற அந்த மாநில அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஏற்கெனவே அந்த மாநில முதலமைச்சர் சித்தராமையா, தண்ணீர் திறந்துவிட முடியாது என நேற்று கூறியிருந்தார். இன்று அதையே அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் வழிமொழிந்துள்ளனர். 

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கர்நாடகத்தில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது என்றும் தங்கள் மாநிலத்தின் தேவைக்கு 70 டிஎம்சி தேவைப்படும் நிலையில், கையிருப்பு 53 டிஎம்சிதான் என்றும் இதனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com