கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் 5 நாள்கள் சிறப்பு ரயில் சேவை!

கிரிக்கெட் போட்டிக்காக சென்னையில் 5 நாள்கள் சிறப்பு ரயில் சேவை!
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாள்களில் சென்னையில் மாடி ரயில் பாதையில் சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

ஐசிசி உலகக் கோப்பை ஆண்கள் கிரிக்கெட் போட்டிகள் வரும் 8ஆம் தேதி, 13, 18, 23, 27 ஆகிய ஐந்து நாள்களில் சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இதையொட்டி மைதானத்தையொட்டிய சிந்தாதிரிப்பேட்டை தொடர்வண்டி நிலையத்துக்கு கிரிக்கெட் ஆர்வலர்கள் சென்றுவர வசதியாக சிறப்பு வண்டிகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  

குறிப்பிட்ட 5 நாள்களிலும் வேளச்சேரியிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு இரவு 10.40 மணிக்கும், மறு வழியில் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்திலிருந்து 11.20 மணிக்கும் இந்த சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கப்படும்.

இவை, வழக்கம்போல வேளச்சேரி, பெருங்குடி, தரமணி, திருவான்மியூர், இந்திரா நகர், கஸ்தூர்பா நகர், கோட்டூர்புரம், கிரீன்வேஸ் சாலை, மந்தைவெளி, திருமயிலை, முண்டகக்கண்ணி அம்மன் கோயில், கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை நிலையங்களுக்கு பயணிகளைக் கொண்டுசேர்க்கும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com