குடிநீர் விற்பனையில் களமிறங்கும் ஆவின்

ஆவின் நிறுவனம் குடிநீர் விற்பனையில் களமிறங்க உள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையை மேற்கொண்டு வரும் நிலையில், குடிநீர் விற்பனையையும் தொடங்க உள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், தண்ணீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ளது. 1 லிட்டர், 500 மில்லி லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், இந்த குடிநீர் பாட்டில்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் விற்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தப்புள்ளி கோரும் குடிநீர் ஆலையானது அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின் படி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com