காசம்மாள்
காசம்மாள்

கடைசி விவசாயி படத்தின் மூதாட்டி கொலை!

தேசிய விருது பெற்ற தமிழ்த் திரைப்படம், கடைசி விவசாயி. மணிகண்டன் இயக்கியிருந்த இப்படத்தில் நடித்த நல்லாண்டி என்ற விவசாயிக்குதான் தேசிய விருது வழங்கப்பட்டது. அவரின்தங்கையாக நடித்தவர், காசம்மாள். 

எழுபத்தொரு வயதான இவர், மதுரை, உசிலம்பட்டியை அடுத்த ஆனையூரைச் சேர்ந்தவர். இவரின் 52 வயது மூத்த மகன் நமகோடி, மணமுறிவால் தாயுடன் வசித்துவந்தார். 

குடிநோயாளியான இவர், ஞாயிறு காலைப் பொழுது விடியும்முன்னரே 3 மணிவாக்கில் தன் தாயாரை எழுப்பி, மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தரமுடியாது எனச் சொல்லிவிட்டார். 

கோபம்கொண்ட நமகோடி தாயென்றும் பாராமல் அருகிலிருந்த கட்டையை எடுத்து காசம்மாளைத் தலையில் அடித்தார். படுகாயம் அடைந்த அவர், அந்த இடத்திலேயே உயிரிழந்தார். 

நமகோடியை உசிலம்பட்டி காவல்நிலையத்தினர் கைதுசெய்தனர்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com