கடல் கொந்தளிப்பு, தூத்துக்குடி மாவட்டம்
கடல் கொந்தளிப்பு, தூத்துக்குடி மாவட்டம்

குமரி, தூத்துக்குடியில் கடல் கொந்தளிப்பு... எச்சரிக்கை!

கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வானிலை சீரற்று கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 

திடீரென பலத்த காற்று வீசுவதுடன் கள்ளக்கடல் வாய்ப்பும் உள்ளதால் மீனவர்கள், கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படியும் அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

நாளைவரை யாரும் கடற்கரைக்குப் பகுதிகளுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com