கேரள மாநிலம், கமளசேரி ஜெபக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு
கேரள மாநிலம், கமளசேரி ஜெபக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு

கேரள குண்டுவெடிப்பு- 12 வயது சிறுமியும் இறப்பு!

கேரள மாநில ஜெபக்கூட வெடிப்பில் படுகாயம் அடைந்த 12 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துவிட்டார்.

நேற்றைய தொடர் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் நான்கு பேருக்கு எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. நால்வரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருந்துவந்த நிலையில், இன்றைய நாள் தொடங்கும் வேளையில் சாமம் 12.40 மணியளவில் மலையாற்றூரைச் சேர்ந்த லிபினா என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

இந்தச் சிறுமிக்கு 95 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டு, நேற்று முழுவதும் செயற்கைச் சுவாசத்திலேயே சிகிச்சை பெற்றுவந்தார்.

முன்னதாக, இந்த வெடிப்பில் இரிங்கோல் பகுதியைச் சேர்ந்த லியானோ பாவ்லோஸ் என்பவர் நிகழ்விடத்திலேயே பலியானார். நேற்று மாலையில் மருத்துவமனையில் குமாரி புஷ்பம் என்பவர் மரணம் அடைந்தார். அவருக்கு 90 சதவீதம் அளவுக்கு காயம் இருந்தது. இவர்,தொடுபுழையை அடுத்த காளியாறு கோயம்பாடியைச் சேர்ந்தவர் என்றும் இரண்டு மகன்கள், மருமகளுடன் வசித்துவந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முதலில் இறந்துபோன லியானோ இந்த மூன்று நாள் செபக்கூட்டத்துக்கு தனியாக  வந்திருந்ததால், அவரை அடையாளம் காண்பது சிரமமாக இருந்தது. 

களமசேரி குண்டுவெடிப்பில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மைய, மாநில அரசுகளின் காவல்துறை அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com