சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி
சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி

சம்சாரம்...மின்சாரம் - ஜி.கே.மணி பேச்சால் சட்டப்பேரவையில் கலகலகலப்பு!

சட்டப்பேரவையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி இன்று காலையில், சம்சாரம் இல்லாமல் மனிதன் வாழலாம்; ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என்று எதுகை மோனையில் தொடங்கிப் பேசினார். தாயின் கருவறைப் பரிசோதனை முதல் கல்லறைவரை மின்சாரப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று விவரங்களையும் எடுத்துவைத்தார். அவரின் பேச்சைக் கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அவையின் பல உறுப்பினர்களும் கலகலப்பாக சிரித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கடந்த 2022ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் 3 கோடியே 24 இலட்சத்து 65 ஆயிரம் பேர் என்றும், 2023ஆம் ஆண்டில் 3 கோடியே 31 இலட்சத்து 16 ஆயிரம் பேர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கம் தென்னரசின் பதிலால் கலகலப்பாக சக அமைச்சர்கள்
தங்கம் தென்னரசின் பதிலால் கலகலப்பாக சக அமைச்சர்கள்

அவருக்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ”உறுப்பினர் மணி மின்சாரத்தின் தேவை குறித்து சிறப்பாக எடுத்துரைத்தார். ஆனால், தொடக்கத்தில் அவர் பேசியபோது, சம்சாரம் இல்லாமல் யாரும் இருந்துவிடலாம் என்பதை இந்த அவையில் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை; நான் உறுதியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” எனக் கூற, அமைச்சர்களும் உறுப்பினர்களும் சிரிக்க அவை கலகலப்பானது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com