தமிழ் நாடு
மதுரையில் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் சல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இணையதளத்தில் மட்டுமே பதிவு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
www.madurai.nic.in எனும் இணையதளத்தில் இன்றும் நாளையும் நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணிவரை முன்பதிவு நடைபெறுகிறது.
அவனியாபுரத்தில் வரும் 15 ஆம் தேதியும் பாலமேட்டில் 16 ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் சல்லிக்கட்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.