சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்

சி.பி.எம். எம்.பி., எம்.எல்.ஏ.களும் ஊதியத்தை நிவாரணமாக வழங்க முடிவு!

மிக்ஜம் புயல் பாதிப்பையடுத்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தை வழங்க முன்வருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதன்படி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, சிபிஐ (எம்) கட்சியும் இந்த முடிவை எடுத்துள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், “மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிடும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்.” என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com