இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்

சி.பி.ஐ. கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.களும் ஊதியத்தை நிவாரண நிதிக்கு..!

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று இடதுசாரி கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை புயல் நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர். 

முன்னதாக, இன்று, சிபிஐ-எம் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் (திருப்பூர்), எம். செல்வராசு (நாகபட்டினம்), சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர்கள் தி.இராமச்சந்திரன் (தளி) மற்றும் க.மாரிமுத்து (திருந்துறைப்பூண்டி) ஆகியோர் சென்னை பெரு மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்று அக்கட்சியின் மாநிலச்செயலாளர் இரா. முத்தரசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com