தமிழ் நாடு
சிறையில் இருந்துவரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீரென உடல் நலிவு ஏற்பட்டதால், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்படி அவர் மீது வழக்கு பதியப்பட்டு, கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைதானபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்படவே, ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவமனையில் அவருக்கு இதய அடைப்பு நீக்க சிகிச்சை செய்யப்பட்டது. அதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு, ஏழாவது முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிணையில் வெளியில் வர அவர் தாக்கல்செய்த மனு விசாரணையில் உள்ளது.