தேர்தல்
தேர்தல்வடிவமைப்பு - எஸ்.கார்த்தி

சில பகுதிகளைத் தவிர 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவு!

Published on

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 

சில இடங்களில் மட்டும் 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு தொடர்கிறது. 

காலையில் தேர்தலைப் புறக்கணித்த பரந்தூர் ஏகனாபுரத்தில் மாலையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்ததாகத் தகவல்கள் வந்துள்ளன. 

வேங்கைவயலிலும் இப்படி வாக்களிக்க சிலர் வந்ததாகக் கூறப்படுகிறது. 

கோவை, சூலூர் பகுதியில் எந்திரக் கோளாறு காரணமாக தாமதமாகத் தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 9மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றபடி வாக்குப்பதிவு முடிந்த இடங்களில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

சீல் வைக்கப்பட்ட எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.  

logo
Andhimazhai
www.andhimazhai.com