சுகாதார நடைபாதைத் திட்டம் - சென்னையில் உதயா; முதல்வர் வேண்டுகோள்!

நடப்போம் திட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி, மேயர் பிரியா
நடப்போம் திட்டத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி, மேயர் பிரியா
Published on

தமிழ்நாட்டில் இன்று 38 மாவட்டங்களிலும் ஒரே நாளில் எட்டு கி.மீ. சுகாதார நடைபாதை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கங்களில், ” நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் இந்தியர்களைப் பெரிதும் அச்சுறுத்துகின்றது. இதற்கு ஆரம்பகட்ட தீர்வாக மருத்துவ உலகம் முன்வைப்பது முறையான நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும்தான். எனவே, அனைத்து மாவட்டங்களிலும் நமது அரசு தொடங்கியுள்ள நலவாழ்வு நடைப்பயிற்சி 8 கி.மீ. சுகாதார நடைபாதை (Health Walk) திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! நடப்போம் நலம் பெறுவோம்!” என்று கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும் மேயர் பிரியாவும் கலந்துகொண்டனர். கொட்டும் மழையில் நனைந்துகொண்டே தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வேலு உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com