பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத்சிங்கிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவிக் கோரிக்கை கடிதம் அளித்தார்.
பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத்சிங்கிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவிக் கோரிக்கை கடிதம் அளித்தார்.

சென்னைக்கு நிவாரணத்துடன் வெள்ளத் தடுப்புக்கு ரூ.562 கோடி: பிரதமர் உத்தரவு- அமித்ஷா தகவல்

பாதுகாப்புத் துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் நேற்று சென்னைக்கு வந்து புயல் மழை பாதித்த பகுதிகளை விமானத்தின் மூலம் பார்வையிட்டார். பின்னர், முதலமைச்சர் ஸ்டாலினுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, அவரிடம் தமிழ்நாட்டுக்கு புயல் இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி ரூபாயை வழங்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு நேரில் கோரிக்கை விடுத்ததும், தமிழகத்துக்கு ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து, மேலும் 450 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

மேலும், ”நகர்ப்புற வெள்ளத் தணிப்புத் திட்டத்தின்படி முதல் முறையாக தேசிய பேரிடர் தணிப்பு நிதியத்திலிருந்து சென்னைப் பகுதி ஒருங்கிணைந்த நகரப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்காக 561.29 கோடி ரூபாய் ஒதுக்கவும் ஒப்புதல் அளித்துள்ளார். இதில் மைய அரசின் உதவிநிதி 500 கோடி ரூபாய் ஆகும். கடந்த எட்டு ஆண்டுகளில் சென்னை மூன்றாவது முறையாக மிக மோசமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இது நகர்ப்புற வெள்ளத் தணிப்புத் திட்டத்தில் முதல் ஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.” என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com