சென்னையில் மழையால் 2 விமான சேவைகள் நிறுத்தம்!

சென்னையில் மழையால் 2 விமான சேவைகள் நிறுத்தம்!

சென்னையில் இன்று அதிகாலை முதலே பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ள நீர் தேங்கிவிடாதபடி மாநகராட்சிப் பணியாளர்கள் களமிறங்கி போர்க்கால அடிப்படையில் பணியாற்றிவருகின்றனர். மேயர் பிரியாவும் பல இடங்களுக்குச் சென்று பணிகளை முடுக்கிவிட்டுவருகிறார். 

பலத்த மழை காரணமாக, உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. போதிய பயணிகள் இல்லாத காரணத்தால், இன்று மாலை 5.30 மணிக்கு பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவிருந்த இண்டிகோ விமான சேவையும், மறுவழியில் சென்னையிலிருந்து மாலை 6.10 மணிக்கு பெங்களூருக்குச் செல்லவேண்டிய இண்டிகோ சேவையும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com