வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்

சென்னை - நெல்லை இடையே நாளை வந்தேபாரத் சிறப்பு ரயில்

தீபாவளியை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு சிறப்பு ’வந்தேபாரத்’ ரயில்வண்டி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு பேருந்து, தொடர்வண்டிகளில் முன்பதிவு செய்யவும் வழியில்லாமல் ஆயிரக்கணக்கான பயணிகள் தவிக்கின்றனர். தலைநகர் சென்னையிலிருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் வண்டிகளை விடவேண்டும் என கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், நாளை 9ஆம் தேதி சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு காலை 6 மணிக்கு சிறப்பு வந்தேபாரத் (வண்டி எண் 06067) ரயில்வண்டி இயக்கப்படும். பிற்பகல் 2.15 மணிக்கு அந்த வண்டி நெல்லையைச் சென்றடையும்.

மறுவழியில், நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும் வந்தேபாரத் சிறப்பு ரயில் (06068) இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

பராமரிப்புப் பணி காரணமாக தேஜஸ் ரயில் இயக்கப்படாது என்றும் அந்த வழித்தடத்தில் கூடுதலாக வந்தே பாரத் சிறப்பு ரயில்வண்டி இயக்கப்ப டுகிறது என்றும் வழக்கமான கட்டணமே சிறப்பு ரயிலுக்கும் வசூலிக்கப்படும் என்றும் தொடர்வண்டித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com