தமிழ் நாடு
மிச்சௌங் புயல் காரணமாக சென்னை- சுற்றுவட்டாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் ஓராள் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலங்கள் போடும் அளவுக்கு நிலைமை நீடிக்கிறது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி முதல் இன்றுவரை அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, நாளையும் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. சற்றுமுன் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.