செய்யாறு சிப்காட்- பா.ஜ.க. போராட்டம் தள்ளிவைப்பு!

செய்யாறு சிப்காட்- பா.ஜ.க. போராட்டம் தள்ளிவைப்பு!
Published on

விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவல் போடப்பட்டதை எதிர்த்து இன்று நடத்துவதாக இருந்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக பா.ஜ.க. விவசாயிகள் அணியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார். 

சிப்காட் நிலம் திருவண்ணாமலை அனக்காவூரைச் சார்ந்த 9 கிராமங்களில் 3,200 ஏக்கர் விளைநிலத்தை சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தியதை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது பொய்வழக்கு போட்டதோடு அதில் 7 பேரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ததை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் தங்கள் கட்சியின் விவசாய அணியின் சார்பில் அதன் மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஆரணி - கூட்டுச் சாலை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

போராட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் 6 விவசாயிகள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்துசெய்வதாக முதலமைச்சர் அறிவித்தார்.

அதனால், இன்று செய்யாறில் நடைபெறவிருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த விவசாயி அருள் என்பவர் மீது குண்டர் சட்டம் ரத்துசெய்யப்படாததன் பின்னணி குறித்து ஆய்வுசெய்ய விவசாய அணி மாநிலச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்த குழுவின் அறிக்கைக்குப் பின்னர் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஜி.கே. நாகராஜ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com