அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி- அமைச்சர் பொன்முடியின் பதவி தப்புமா?

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சாதகமாக அமைந்த தீர்ப்பு ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தண்டனை உறுதியாகியுள்ளது.

கடந்த 2006-11 ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கும் அதிகமாக பொன்முடி, அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோர் 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்தனர் என்று ஊழல் தடுப்புச் சட்டப்படி வழக்கு பதியப்பட்டது. அதில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் பொன்முடி தரப்பினரை விடுவித்தது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், நீதிபதி ஜெயச்சந்திரன் பொன்முடியை விடுவித்த தீர்ப்பை ரத்துசெய்தார்.

வரும் 21ஆம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளோ அதற்கு மேலோ தண்டனை பெற்றால் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராகவே தொடர முடியாது; அதற்குக் குறைவாக சிறைத் தண்டனை கிடைத்தாலும் அமைச்சர் பதவி பறிபோகவும் வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே, அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கு, அமலாக்கத்துறை நடவடிக்கைகளால் தி.மு.க. அரசாங்கம் சங்கடத்துக்கு உள்ளானது. இந்நிலையில் பொன்முடி விவகாரத்தால் புதிய நெருக்கடி தோன்றியுள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com