சோதனைகளை தாங்கும் வல்லமையை முதலமைச்சர் தந்துள்ளார்: செந்தில் பாலாஜி

சோதனைகளை தாங்கும் வல்லமையை முதலமைச்சர் தந்துள்ளார்: செந்தில் பாலாஜி

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடி ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு உணவக உரிமையாளர் மணி, காளிபாளையம் பெரியசாமி ஆகியோரின் வீடுகளில் சோதனை மேற்கொள்ள வந்த வருமானவரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான 22 இடங்களில் சோதனை நடைபெற்றது. கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகங்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர். பொள்ளாச்சி அருகே உள்ள காளியாபுரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நண்பர் அரவிந்தின் பண்ணை வீடு மற்றும் கிணத்துக்கடவு அருகே பணப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினருடைய கல்குவாரியில் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் கரூரில் உள்ள திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி இறுதி ஆட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆயிரம் சோதனை வந்தாலும் அதை எதிர் கொள்ளோம் என்றார்.எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி என செந்தில் பாலாஜி விமர்சித்தார். வருமான வரித்துறை சோதனையின் போது, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே கட்சி தொண்டர்கள் கேள்வி எழுப்பியதாக செந்தில் பாலாஜி கூறினார். வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com