ஜெயலலிதா நினைவு நாள்- சசிகலா நீக்கம் செல்லுமெனத் தீர்ப்பு!

ஜெயலலிதா நினைவு நாள்- சசிகலா நீக்கம் செல்லுமெனத் தீர்ப்பு!
Published on

ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.க. பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

முன்னதாக, ஜெயலலிதா மறைந்த பிறகு அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டார். அவருக்கு எதிர்ப்பாக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார்.

கூவத்தூர் சம்பவம் அரங்கேறியது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக ஆனார். ஓ.பன்னீர்செல்வமும் அவரும் இணைந்து அ.தி.மு.க. கூட்டுத் தலைமையாக உருவெடுத்தார்கள். 

அடுத்தடுத்து காட்சிகள் மாற, பழனிசாமியின் கை ஓங்கி, கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார், பன்னீர்செல்வம். 

அ.தி.மு.க. யாருக்கு என்ற பிரச்னை, உச்சநீதிமன்றம்வரை போய் பழனிசாமிதான் கட்சியின் பொதுச்செயலர் என்பது உறுதியானது. 

இதனிடையே, சசிகலா தான் முறைப்படி கட்சியின் பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், தானே கட்சிக்கு அதிகாரம் உடையவர் என்பதை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்காகக்த் தொடுத்தார். சில ஆண்டுகளாக இழுத்தடித்த அவ்வழக்கில் அவரின் மனு தள்ளுபடியானது. 

உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்ய, இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. கட்சியின் உச்சபட்ச அதிகாரம்படைத்த பொதுக்குழுவில்தான் சசிகலாவை நீக்கியதாக எடப்பாடி பழனிசாமியின் வாதத்தை ஏற்று, உயர்நீதிமன்றம் சசிகலாவின் மனுவைத் தள்ளுபடி செய்தது. 

இன்று ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com