டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து!

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்
Published on

இருசக்கர வாகன ஆபத்து சாகசக்காரர் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இன்று காலையில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன் வெளியிட்டுள்ளார்.

பொதுப் போக்குவரத்து வாகனங்களை ஆபத்தான சாகசங்களுக்குப் பயன்படுத்தி அதை யூடியூபில் வெளியிட்டு பிரபலம் ஆனவர், வாசன் என்கிற வைகுந்தவாசன். இதற்காக இவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சென்னை, கோவை, நீலகிரி மட்டுமின்றி இமாச்சலப்பிரதேசத்தின் மணாலியிலும் வாசன் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

அடிக்கடி போக்குவரத்து குற்றம் இழைக்கும் நபர் என்பதால், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு வாசனுக்கு வாகனத் துறை உத்தரவிட்டது. அதற்கு அவருடைய தரப்பில் பதில் அளிக்காததால், பொது நலன் கருதி, வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்துசெய்வதாக காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தன் உத்தரவில் தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com