
தென் மாவட்டங்களில் அதி கன மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கான தொடர்பு எண் விவரத்தை அரசு அறிவித்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அதிகனமழை பெய்து வருவதை தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்கள் அதாவது ரொட்டி பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பால் பவுடர், உலர் பழங்கள், மளிகைப் பொருட்கள், பாய்கள், போர்வைகள், துண்டுகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், லுங்கிகள், நைட்டிகள், நேப்கின்பேடுகள் உட்பட்ட பொருட்களை வழங்க விரும்பும் தன்னார்வலர்கள், நிறுவனங்கள் அரசைத் தொடர்புகொள்ளலாம்.
கீழ்காணும் வாட்சாப் / அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
வாட்சாப் / அலைபேசி எண்: 73977 66651