தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல் ; ஆவினுக்கு பாதிப்பு: முதலமைச்சர் கடிதம்

தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல் ; ஆவினுக்கு பாதிப்பு: முதலமைச்சர் கடிதம்

குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் இதுநாள் வரை தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் தரமான பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்நிலையில், அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சுற்றி உள்ள பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com