அண்ணாமலை
அண்ணாமலை

‘தமிழ்நாட்டில் ஒழிக்கப்பட வேண்டியது தி.மு.க.தான்!' – அண்ணாமலை காட்டம்

தமிழ்நாட்டிலிருந்து ஏதாவது ஒன்றை ஒழிக்க வேண்டும் என்றால் அது தி.மு.க.தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில நாட்கள் முன்பு, தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "கொசு, டெங்கு, ஃப்ளூ, மலேரியா போன்ற நோய் சனாதனம். அதை அழிக்க வேண்டும்." என்று விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் என பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டில் இருந்து ஏதாவது ஒன்றை ஒழிக்க வேண்டும் என்றால் அது தி.மு.க.தான்.

D – Dengue

M – Malaria

K - Kosu.

இனி வரும் காலங்கள் மக்கள் இந்த கொடிய நோய்களுடன் தி.மு.க.வை தொடர்புப் படுத்துவார்கள் என்று நம்புவோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு என்னுடைய மறுப்பு என்று குறிப்பிட்டு அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அதில் பேசியுள்ள அவர், "ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம். உங்கள் அறிக்கையையும், உங்கள் மகனின் அறிக்கையையும் பார்த்தோம். கடந்த 4 நாட்களாக நீங்கள் தோற்கும் சண்டையைப் போடுகிறீர்கள். இன்று பிரதமர் நரேந்திர மோடி குறித்து பொய்களைப் பரப்புகிறீர்கள் " என்று பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com