தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்

தி.மு.க. முப்பெரும் விழா 15ஆம் தேதிக்கு மாற்றம்!

தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த முப்பெரும் விழா வரும் 15ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த சனிக்கிழமை தி.மு.க.வின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, வாக்காளர்களுக்கும் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவும் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவும் சேர்த்து முப்பெரும் விழாவாக கோவையில் வரும் 14ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இன்று காலையில் துரைமுருகன், கோவை கொடீசியா அரங்கில் வரும் 15ஆம் தேதி மாலையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com