திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்: வானதி சீனிவாசன்

கோவை காந்திபுரம் இரண்டாவது வீதியில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எந்த பட்டியல் இன மக்கள் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியவில்லை. எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார்.திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த திருமாவளவன், “திமுகவை பலவீனமாக்கும் எந்த செயலையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்யாது. கூட்டணி தொடர்பாக யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் வானதி சீனிவாசனின் அழைப்பையும் நிராகரித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com