திருவண்ணாமலை
திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபத் திருவிழா- 2,700 சிறப்புப் பேருந்துகள்; கிரிவலத்துக்கு இலவச சிற்றுந்து வசதி!

கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருநாள் வரும் 26ஆம் தேதி ஞாயிறு அன்று மாலை 06.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதைமுன்னிட்டும் 27ஆம் தேதி முழு நிலவு கிரிவலத்தை முன்னிட்டும், 25ஆம் தேதி சனி முதல் 27ஆம் தேதி திங்கள்வரை, சென்னையிலிருந்தும் பிற முக்கிய நகரங்கள், அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரியிலிருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் மூலம் 6,947 நடைகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிகப் பேருந்து நிலையங்களிலிருந்து பக்தர்கள் கிரிவலப் பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக 40 சிற்றுந்துகள் பயணிகள் கட்டணமில்லா சிற்றுந்துகளாக இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகள் புறப்படும் இடங்கள் ஆகிய விவரம்

1 வேலூர் ரோடு – Anna Arch போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு

2 அவரலூர்பேட்டை ரோடு – SRGDS பள்ளி எதிரில் சேத்துப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம்

3 திண்டிவனம் ரோடு – ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு

4 வேட்டவலம் ரோடு – சர்வேயர் நகர் வேட்டவலம், விழுப்பரம்

5 திருக்கோயிலூர் ரோடு – ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர் திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி

6&7 மணலூர்பேட்டை ரோடு – செந்தமிழ் நகர் மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை

8 செங்கம் ரோடு – அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன் செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூர், ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர்

9 காஞ்சி ரோடு – டான் பாஸ்கோ பள்ளி காஞ்சி, மேல்சோழங்குப்பம்

மேலும், பயணிகள் அடர்வு குறையும்வரை தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்கவும் பக்தர்களுக்கு எவ்விதமான அசௌகரியம் ஏற்படாமல் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com