வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் குறிப்பாகதூத்துக்குடியில் நோய்த்தொற்று அபாயம் உருவாகியுள்ளதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர், மழை நின்று ஏழு நாள்கள் ஆகியும் பல பகுதிகளில் தேங்கிய நீரில் கால்நடைகள் இறந்து மிதக்கின்றன; மிகப் பெரிய மோட்டார்களைக் கொண்டு நீரை வெளியேற்றி இவற்றையும் அகற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், நெல், வாழை, வெற்றிலை போன்ற பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்; கோழிகள், கால்நடைகளை இழந்துள்ளனர்; உப்பளங்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிவிட்டன; தூத்துக்குடியில் குறிப்பாக ஏரல் பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது; கடைகளில் வைத்திருந்த அரிசி, உர மூட்டைகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன; எனவே, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதென் மாவட்டங்களுக்கு அரசின் நிவாரணத்தை 15ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.