தென்காசி- லாரி, கார் நேருக்குநேர் மோதி 6 பேர் உயிரிழப்பு!

தென்காசி- லாரி, கார் நேருக்குநேர் மோதி 6 பேர் உயிரிழப்பு!

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், காரில் பயணம் செய்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், புளியங்குடி கிராமம், பகவதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த போத்திராஜ் (வயது 32), வேல்மனோஜ் (வயது 30), சுப்பிரமணியன் (வயது 29), கார்த்திக் (வயது 24) , முத்தமிழ்செல்வன் (வயது 23) , மனோ (வயது 19) ஆகிய 6 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

துயரகரமான இச்செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார் என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com