வைகோ
வைகோ

தொகுதிப் பங்கீடு- அவசரமாகக் கூடும் ம.தி.மு.க. செயற்குழு!

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. அணியில் இன்னும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க. ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடிக்கிறது. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக ம.தி.மு.க. நிர்வாகக் குழு நாளை அவசரமாகக் கூடுகிறது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ” மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் நாளை (07.03.2024 வியாழன்) காலை 10 மணிக்கு தலைமை நிலையம் ‘தாயக’த்தில் கழக அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டக் கழகச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம், ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் ஆகியோர் இதனையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருள்: நாடாளுமன்றத் தேர்தல் - 2024” என்று வைகோ கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com