நலமாக இருக்கிறார் விஜயகாந்த்- படம் வெளியிட்ட பிரேமலதா!

நலமாக இருக்கிறார் விஜயகாந்த்- படம் வெளியிட்ட பிரேமலதா!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என சில நாள்களுக்கு முன்னர் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாலையில் அந்த மருத்துவமனையின் முன்பாக காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருப்பதாகவும் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து வருத்தமான தகவல்களும் தகவல்கள் வெளியாகின. அதனால் தே.மு.தி.க. கட்சியினரும் விஜயகாந்த் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர். ஆங்காங்கே விஜயகாந்தின் உடல்நிலை குறித்து தொலைபேசியில் விசாரித்தபடி இருந்தனர். இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தன் கணவர் விஜயகாந்துடன் மருத்துவமனையில்  எடுத்துக்கொண்ட படங்களை வெளியிட்டு அவர் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com