நல்லக்கண்ணு சென்னை,நந்தனம்  அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்
நல்லக்கண்ணு சென்னை,நந்தனம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்

நல்லக்கண்ணு உட்பட இடதுசாரி தலைவர்கள் வாக்களித்தது எங்கெங்கே?

சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லக்கண்ணு உட்பட்ட பல இடதுசாரி தலைவர்கள் சென்னையில் வாக்களித்தனர். 

சென்னை, தக்கர்பாபா வித்தியாலயாவில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் து. ராஜா
சென்னை, தக்கர்பாபா வித்தியாலயாவில் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் து. ராஜா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் து.இராஜா, சென்னை தியாகராயர் நகர் தக்கர்பாபா வித்யாலயாவிலும், மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு சென்னை, நந்தனம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர். 

திருத்துறைப்பூண்டி, வேளூர் தொடக்கப் பள்ளியில் இரா.முத்தரசன் வாக்களிப்பு
திருத்துறைப்பூண்டி, வேளூர் தொடக்கப் பள்ளியில் இரா.முத்தரசன் வாக்களிப்பு

மாநிலச் செயலாளர், இரா.முத்தரசன், திருத்துறைப்பூண்டி, வேளூர் தொடக்கப் பள்ளியிலும், மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முகாசி அனுமன்பள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மு. வீர பாண்டியன் சென்னை வியாசர்பாடி, ஏரிக்கரை பள்ளியிலும், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை, அலமேலு மங்கத்தாயாரம்மாள் பள்ளியிலும், இன்று வாக்களித்தனர்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில், பத்மாவதிபுரம் பள்ளிக்கூடத்தில் சாவடியில் வாக்கைப் பதிவு செய்தார்.

நாகப்பட்டினம் வேட்பாளர் வை. செல்வராஜ், மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சியில் உள்ள அரசூர் வாக்குச்சாவடியில் தன் வாக்கைப் பதிவு செய்தார்.

சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன்  வாக்களிப்பு
சிதம்பரத்தில் கே.பாலகிருஷ்ணன் வாக்களிப்பு
ஜி.இராமகிருஷ்ணன்
ஜி.இராமகிருஷ்ணன்
டி.கே.ரங்கராஜன்
டி.கே.ரங்கராஜன்
உ. வாசுகி
உ. வாசுகி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரம் மானாசந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் சென்னை ஆதம்பாக்கம் புனித மாற்கு பள்ளியிலும், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் தியாகராயர் நகர் ராமகிருஷ்ணா பள்ளியிலும், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி நீலாங்கரை சன்பீம் பள்ளியிலும் தங்கள் வாக்குகளைப் பதிந்தனர்.

கி.வீரமணி வாக்களிப்பு
கி.வீரமணி வாக்களிப்பு

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை அடையாறு காமராசர் அவென்யூ (மண்டலம் 13) சென்னை உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் காலை 8:30 மணியளவில் வாக்களித்தார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தன் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com