வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- நவ. 4, 5,18,19 தேதிகளில் திருத்தம்!
தமிழ்நாட்டின் வரைவு வாக்காளர் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு சென்னையில் சற்றுமுன்னர் வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர்; ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம்; 3.1 கோடி பெண்கள் வாக்காளர்களாக உள்ளனர்.” என்று தெரிவித்தார்.
நவம்பர் 9ஆம் தேதி வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என்றும் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் ஆகியவற்றுக்காக நவ. 4, 5,18,19 தேதிகளில் சிறப்புமுகாம்கள் நடத்தப்படும் என்றும் திருத்தம் முடிந்தபின்னர் ஜனவரி 5ஆம்தேதி இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்றும் சத்தியப்பிரதா சாகு கூறினார்.
மாநிலத்திலேயே சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 6.52 இலட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1.69 இலட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.