தமிழ் நாடு
நாகையிலிருந்து இலங்கைக்கு பயணியர் கப்பல் - நாளை வெள்ளோட்டம்!
நாற்பதுஆண்டுகளுக்குப் பிறகு ஒருவழியாக நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு பயணியர் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது.
வரும் 10ஆம்தேதி நாகையிலிருந்து வட இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறைக்கு பயணியர் கப்பல் சேவை இயக்கப்படுகிறது.
அதற்கு முன்னதாக, நாளையும் நாளைமறுநாளும் இரண்டு வெள்ளோட்ட சவாரிகள் இயக்கப்படும். காலை 7.30 மணியளவில் நாகையிலிருந்து புறப்படும் இந்தப் பயணியர் கப்பல் மூன்றரை மணி நேரம் முதல் நான்கு மணி நேரத்துக்குள் காங்கேசன்துறையைச் சென்றடையும்.