தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ம.மதன்குமார் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இறந்ததற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி, அந்த மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் உயிரிழந்த மதன்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், முதலமைச்சர் ஆவார் நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி வழஙக உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக நாமக்கல் மாணவர் இறந்த தகவல் அறிந்து தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அந்த மாநில அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு மாணவரின் உடல் விமானத்தின் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது என்றும்
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி இன்று காலை மருத்துவ மாணவரின் உடல் தகனம் செய்யப்பட்டது என்றும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி: