சீமான்
சீமான்

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டின்தலைமைத்தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு சற்றுமுன்னர் சென்னை, தலைமைச்செயலகத்தில் இதைத் தெரிவித்தார். 

கரும்பு விவசாயிகள் சின்னத்தை பலதேர்தல்களிலும் பயன்படுத்தி வந்த நாம்தமிழர் கட்சிக்கு, இந்த முறை அந்தச் சின்னம் ஒதுக்கப்படவில்லை. 

தூத்துக்குடி நிவாரணப் பணிகளில் இருந்ததால், சின்னத்துக்கு உரிய காலத்தில் விண்ணப்பிக்க முடியவில்லை என்று சீமான் விளக்கம் கூறினார்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் அடையாளமாக இருந்த கரும்பு விவசாயிகள் சின்னத்தை, இந்தத் தேர்தலில் கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

பதினொரு மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு இந்தச் சின்னம் ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com