தமிழ் நாடு
தி.மு.க.வின் புதிய மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. தலைமையகமான சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நாளை சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இக்கூட்டம் நடைபெறும்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் இதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு ஒன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.