நெருங்கிய நண்பரை இழந்திருக்கிறேன்: சரத்பாபு மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

நெருங்கிய நண்பரை இழந்திருக்கிறேன்: சரத்பாபு மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை மரணமடைந்தார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், மலையாளம், கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் நாயகன், வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், “தென்னிந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வலம் வந்த நடிகர் சரத்பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், திரையுலகினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சரத் பாபுவின் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன்.

இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com