நெல்லை, மணிமூர்த்தீஸ்புரம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில்...
நெல்லை, மணிமூர்த்தீஸ்புரம் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சையில்...

மீண்டும் நெல்லையில் மணிமூர்த்தீஸ்புரம் வன்கொடுமை- கட்சிகள் கண்டனம், 6 பேர் கைது!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே மணிமூர்த்தீஸ்புரத்தில் கடந்த 30ஆம் தேதியன்று பட்டியல் சாதி இளைஞர்கள் இருவர் தாமிரபரணிஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது நான்கு பேர் அவர்கள் சாதியைக் கேட்டுவிட்டு, இழிவுபடுத்தி தாக்கியுள்ளனர்.

இரவு 7 மணியளவில் தொடங்கி 10 மணிவரை இருவரையும் வன்கொடுமை செய்தனர். அவர்களுடன் இருவரும் இந்தக் கொடுமையில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட இருவரிடமும் 5 ஆயிரம் ரூபாய், அவர்களின் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் வன்கொடுமை கும்பல் பறித்துள்ளது.

தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தக் கொடுமை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., பா.ம.க. உட்பட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், குற்றவாளிகள் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

தாழையூத்தைச் சேர்ந்த பொன்மணி,  திருமலைக் கொழுந்துபுரம் நல்லமுத்து, ஆயிரம், இராமர், சிவா, இலெட்சுமணன் ஆகிய அறுவர் மீதும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், இந்த வன்கொடுமையில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின்படி கைதுசெய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (M.L), விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, தமிழர் உரிமை மீட்புக்களம், திராவிடத் தமிழர் கட்சி, பூர்விகத் தமிழர் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னனி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நெல்லையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com