தமிழ் நாடு
தமிழ்நாட்டில் பனை மரம் வெட்டியவர் மீது முதல் முறையாக வழக்கு பதியப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், குன்னலூர் ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் பூமிநாதன் மீது எடையூர் காவல்நிலையத்தினர் வழக்கு பதிவுசெய்தனர்.
மாநில மரமாக அறிவிக்கப்பட்ட பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியரின் அனுமதி பெறவேண்டும்; இல்லாவிட்டால் மரத்தை வெட்டியவர் மீது 427ஆவது சட்டப்பிரிவின்படி வழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதன்படி யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் முதல் முறையாக, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டுள்ளது.