பயணிகளைப் பொறுத்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!

பயணிகளைப் பொறுத்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!

தமிழக தென்மாவட்டங்களில் உள்ள சில இடங்களுக்கு கடும் மழை, வெள்ளம் காரணமாக கணிசமான பேருந்துகளை நிறுத்துவது என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவுசெய்துள்ளது. 

இன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் தமிழக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் பயணிகளின் வருகைக்கேற்ப மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் 60 பேருந்துகள் தென்மாவட்டங்களுக்கு இயக்க முடிவு செய்த நிலையில், மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக. பயணிகளின் வருகைக்கேற்றவாறு  குறைவான பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக தென் மாவட்டங்களிலிருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நிலைமையை கண்காணித்து. பயணிகளின் தேவைக்கு ஏற்ப மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழக மக்கள்தொடர்புப் பிரிவு இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com