காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தல் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட விஜயதாரணி வாய்ப்பு கேட்டிருக்கிறார். அதற்கு காங்கிரஸ் கட்சி மறுப்புத் தெரிவித்தாக கூறப்படுகிறது. அதனால், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று காங்கிரஸ் தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகவும் பா.ஜ.கவில் இணையப்போவதாகவும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தன.
இதையடுத்து பா.ஜ.க. வலையில் விஜயதாரணி சிக்கமாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செலவப்பெருந்தகை கூறியிருந்தார்.
இந்த நிலையில், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார்.
விஜயதாரணி விளவங்கோடு தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.