தைலாபுரம் இராமதாஸ் இல்லத்தில் அண்ணாமலையை வரவேற்ற அன்புமணி
தைலாபுரம் இராமதாஸ் இல்லத்தில் அண்ணாமலையை வரவேற்ற அன்புமணி

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்- அண்ணாமலை தெரிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தைலாபுரம் ராமதாஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை இதைத் தெரிவித்தார்.

எந்தெந்தத் தொகுதிகள் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பதில் கூற அண்ணாமலை மறுத்துவிட்டார். பிறகு அதைப்பற்றிப் பேசுவோம் என்று அவர் கூறினார்.

மேலும், சேலத்தில் நடைபெறும் பிரதமர் நரேந்திர மோதி பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் பங்கேற்பார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

தே.மு.தி.க.வுடனான கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நேரடியாக பதில் கூறுவதைத் தவிர்த்த அண்ணாமலை, பா.ம.க.வின் பயிற்சிப் பாசறை, அதன் பெருமைகளைப் பற்றிக் குறிப்பிட்டு நகர்ந்து விட்டார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com