இராஜேஷ்தாஸ்
இராஜேஷ்தாஸ்

பாலினச் சீண்டல் குற்றவாளி முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் சரணடைய ஆணை!

கடந்த ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும்போது பெண் காவல் அதிகாரியிடம் பாலினத் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றவாளியான முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த அவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது.

அதையடுத்து, தண்டனையை அனுபவிக்காமல் தள்ளிப்போகும்வகையில், அவர் மேலும் மேலும் மனுக்களைப் போட்டார்.

சரண் அடைவதிலிருந்து தனக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என அவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

அந்த மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இதனால் பாலினச் சீண்டல் குற்றத்துக்காக ராஜேஸ்தாஸ் உடனடியாகச் சரண் அடையவேண்டும் என்பது உறுதியாகியுள்ளது.   

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com