பிரசவித்த பெண்ணைத் தூக்கிச்சென்ற உறவினர்கள்!

பிரசவித்த பெண்ணைத் தூக்கிச்சென்ற உறவினர்கள்!

பிரசவித்த பின்னர் ஓர் இளம் பெண் வீட்டுக்குச் செல்லவேண்டிய நிலையில், சாலை வசதி இல்லாத காரணத்தால், அவரை உறவினர்கள் சுமந்தபடி தூக்கிச்சென்ற சம்பவம், தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. 

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில்தான் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. சில நாள்களுக்கு முன்னர் இந்த நிகழ்வை, அங்குள்ளவர்கள் படமாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். அது பரவலானவர்களைச் சென்றடைந்ததை அடுத்து, சுகாதாரத் துறை பற்றியும் உள்ளாட்சி அமைப்பின் மீதும் அதிருப்தியும் குற்றச்சாட்டும் எழுந்தது. 

அதைத் தொடர்ந்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் இராஜசேகரன், வால்பாறை அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வுசெய்தார். அப்போது, அங்குள்ள நெடுங்குன்று மலைகிராமத்தினர் சாலை வசதியில்லாததால் நோயாளிகள், கர்ப்பினிகளை சுமந்துகொண்டுதான் தாங்கள் அழைத்துவருவதாகவும் சாலை வசதி செய்துதரும்படியும் கூறினர். 

நகராட்சி சார்பில் வில்லோனி எஸ்டேட் ஒத்தக்கடைவரை பாதை உள்ளதாகவும் அதற்கடுத்து இரண்டு கி.மீ. தங்கள் ஊருக்கு சாலையே அமைக்கப்படவில்லை என்றும் அவர்கள் ஆதங்கப்பட்டனர். 

குறிப்பிட்ட பெண்ணின் வீட்டுக்கே சென்று இணை இயக்குநர் இராஜசேகரன், பரிசோதித்து, சாலை வசதிக்கு மாவட்டஆட்சியரின் கவனத்துக்குக் கொண்டுசெல்வதாக உறுதியும் அளித்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com