முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

புதிய கொரோனா பரவுகிறது- 1,800 மருத்துவர் நியமனம் என்ன ஆனது?- அ.தி.மு.க.

நாடு முழுவதும் கொரோனா புதிய வகை தொற்று பரவிவருகிறது எனும் நிலையில் தமிழகத்தில் போதிய மருத்துவர்களை நியமிக்காமல்தாமதம் செய்வதாக அ.தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் நினைவு நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரின் நினைவிடத்தில் அக்கட்சியினர் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். அங்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊடகத்தினரிடம் பேசுகையில், புதிய வகை கொரோனா நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், தி.மு.க. அரசு ஏற்கெனவே மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 1,100 மருத்துவர்களை எடுப்பதாக அறிவித்தது; ஆனால் இன்னும் அந்த நியமனம் மேற்கொள்ளப்படவில்லை என்றார். 

மேலும், தகவல் உரிமைச் சட்டப்படி மருத்துவர்கள் பெற்ற தகவலின்படி, மேலும் 700 மருத்துவர் பணியிடங்கள் அதாவது 1,800 மருத்துவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது என்றும் அவற்றையும் சேர்த்து மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியம் நிரப்பவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com